பொருளடக்கம்

 1. பிறழ்நிலை உளவியல் ஓர் அறிமுகம் Introduction to Abnormal Psychology
 2. பிறழ்நிலை உளவியலின் வரலாறு History of Abnormal Psychology
 3. பிறழ்வு நடத்தைக்கான காரணங்கள் Causes of Abnormal Behavior
 4. உளநிலைக் குழப்பங்கள் Mood Disorders
 5. பதகளிப்பு Anxiety
 6. ஆளுமை  காளாறுகள் Personality Disorders
 7. மனஅழுத்தமும் கையாளும் திறன்களும் Stress and Coping Skills
 8. மனச்சோர்வு Depression
 9. உளச்சிதைவுநோய் Schizophrenia
 10. மெய்ப்பாட்டுக் கோளாறுகள் Somatoform Disorders
 11. உளநோய் நிர்ணயமும் புள்ளியியல் கையேடும் Diagnostic and Statistical Manual of Mental Disorder (DSM)
 • உசாத்துணை நூல்கள்
 • கலைச்சொற்கள்
 • கலைச்சொற்கள் விளக்கம்

மனநலம் மற்றும் மனநோய்கள் தொடர்பான புரிதல்களும்,சிந்தனைப் போக்குகளும் மக்கள் மத்தியில் காலத்திற்கு காலம் மாற்றம் பெற்று வந்துள்ளது. ஆனாலும் மனிதனுடைய உடல் ஆரோக்கியம் மட்டுமன்றி அவனுடைய வாழ்க்கை மற்றும் சமூக நடத்தைகள் என்பவையெல்லாம் உளரீதியான ஓர் வகைப்படுத்தலின் செயற்படுத்தல் அடிப்படையிலேயே நிகழ்பவையாகும் என்பதை மனம் தொடர்பான ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் சமகாலத்தில் உணர்த்தி நிற்கின்றது. மனித மனம் அதன் செயற்பாடுகள், பிரச்சினைகள் என்பவையெல்லாம் மேலைத்தேயவர்களின் புரிதல்களில் வளர்ச்சி கண்ட அளவிற்கு கீழைத்தேய நாடுகளில் இவை தொடர்பான புரிதல்களும், மனப்பாங்குகளும், தெளிவின்மையும் அதிகளவு மாற்றம் பெறவில்லை என்றே கூறவேண்டும். இதன் காரணமாக மனோவியல் தொடர்பாக ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் கீழைத்தேய மொழிமரபில் அதிகமாக இல்லையென்றே கூறவேண்டும் இதற்கான காரணம் மனோவியல் தொடர்பான ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் ஆங்கிலத்தில் உள்ளமையே ஆகும்.

கலாநிதி கந்தசாமி கஜவிந்தன் எழுதிய “பிறழ்நிலை உளவியல்” என்ற இந்நூலானது மனித அசாதாரண நடத்தைகளை புரிந்துக்கொள்ளவும், மனநோய்களை வகைப்படுத்தி விஞ்ஞான ரீதியாக விளங்கிக் கொள்ள ஓர் அடிப்படையாக இந்நூல் காணப்படுவதுமட்டுமல்ல, மாணவர்களுக்கும், சமூகத்திற்கும் மனநலம் தொடர்பாகவும் மனோவியல் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும் இந்நூல் அடிப்படையாக அமையும். இந்நூலை உருவாக்கிய கலாநிதி. க.கஜவிந்தன் அவர்களின் இந்நூல் இலகுவான தமிழிலும் பொருத்தமான சொற்களோடும் சமூகத்துக்கு வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கதுடன் “பிறழ்நிலை உளவியல்” எனும் இந்நூல் தமிழ்நாடு உளவியல் சங்கத்தின் வெளியீடாகவும் காணப்படுகிறது.

முனைவர்.க.பாலமுருகன், 

தலைவர், தமிழ்நாடு உளவியல் சங்கம், இந்தியா